Mrs. Tharmalingham Kamatchi (Indra)

Tharmalingham Kamatchi (Indra)

Date of Birth: 04 May 1954 - Deceased: 14 October 2025

ஹட்டன் - நோர்வூட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் காமாட்சி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் இலுப்பையூர் கிராமம் காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை - தைலம்மை அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

வீரமச்சான்பட்டி கிராமம் காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை - சியாளம்மை (நோர்வூட்) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் (ஹட்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிரூஷன் (மங்களா ஸ்டீல்ஸ், கொழும்பு-12), பிரதீபா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

விக்கினேஷ்வரன் (நஷ்னல் ஹாட்வெயார், கொழும்பு-12), யுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புஸ்பம் (நோர்வூட்), காலஞ்சென்றவர்களான பெரியசாமி (நோர்வூட்), மூர்த்தி (கொழும்பு), தர்மலிங்கம் (கொழும்பு) மற்றும் சுப்பிரமணியம் (நோர்வூட்) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற பதுளை அம்மையப்பன் பிள்ளை - இராசம்மாள், தலாத்துஓய முரளிஸ்வரன் - இந்திராகாந்தி தம்பதியினரின் சம்மந்தியும்,

சௌந்தர்ராஜன் (கோயம்புத்தூர்), காசிலிங்கம் (சென்னை), சிவலிங்கம் (சென்னை) ஆகியோரின் மைத்துனியும்,

தனன்யா, கிருத்விக், ஹிருத்திக், தஷா, நிதின் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-10-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2025 00:00)