திருமதி. தவமணி நற்குணசிங்கம்

தவமணி நற்குணசிங்கம்

தோற்றம்: 04 மார்ச் 1938 - மறைவு: 20 ஜூலை 2026

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தவமணி நற்குணசிங்கம் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கந்தையா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

அம்பலவாணர் - செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

அம்பலவாணர் நற்குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, ராமசாமி, சிவபாக்கியம், புவனேஸ்வரி மற்றும் கனடாவில் வசிக்கும் துரைசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

கனடாவில் வசிக்கும் சறோஜினி, காலஞ்சென்ற சிவகுமார், கொழும்பில் வசிக்கும் ஜெயக்குமார், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜ்குமார், கொழும்பில் வசிக்கும் செல்வகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும்,

சகாதேவா, ஷகிலா, விஜிதா, சுபோதினி ஆகியோரின் மாமியாரும்,

மதுஷாஜினி, தேவஷாஜினன், பிரகாஷ், நிருஷா, ஹரேஷ், விஷானா, ஹரிணியா, வேணியா, கவிநயா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணிக்கு திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/07/2026 00:00)