திருமதி. தவமணி விசுவநாதன்

(யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை)

தவமணி விசுவநாதன்

தோற்றம்: 17 ஜனவரி 1931 - மறைவு: 06 ஜூன் 2026

A Celebration of life

Mrs. Thavamany Visuvanathan

(loving wife of Ex.Mayor, Jaffna, Raja Visuvanathan and Retired teacher of Jaffna Hindu ladies College)

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தாயகமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி விசுவநாதன் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று நிம்மதியாகத் துயிலில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

யாழ். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான டாக்டர் கந்தப்ப ராஜா சுந்தரராமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜா விசுவநாதன் (சட்டத்தரணி, யாழ் மாநகர முன்னாள் முதல்வர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ருத்ரகுமாரன் (சட்டத்தரணி- நியூயோர்க், பிரதமர்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்), சிவகுமாரன் (பொறியியலாளர்- சிட்னி), டாக்டர் தர்மவதி சுதாகரன் (பொது மருத்துவர்- சிட்னி), கிருஷ்ணகுமாரன் (நிதி ஆலோசகர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கந்தையா இளங்காராஜா, சரஸ்வதி கனகராஜா, பரிமளம் பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கீதாஞ்சலி ருத்ரகுமாரன் (தரவு ஆய்வாளர் - நியூயோர்க்), டாக்டர் கலைவாணி சிவகுமாரன் (பொது மருத்துவர்- சிட்னி), டாக்டர் கனகலிங்கம் சுதாகரன் (பொது மருத்துவர்- சிட்னி), சுரம்யா கிருஷ்ணகுமாரன் (சட்டத்தரணி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபிலயன் ருத்ரகுமாரன், அபிராமி ருத்ரகுமாரன், கிருஷ்ணா விஸ்வா, டாக்டர் கேஷினி விஸ்வா, யாதவன் சுதாகரன், நேயவன் சுதாகரன், நிருபமா கிருஷ்ணகுமாரன், பபிதா ஹர்டிஸ் விஸ்வா, சுபன் அருட்செல்வன், அர்பிதா குனுதுரு சுதாகரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

லோகா சுதாகரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Funeral service:-

Sunday 14th  June 2026

Macquarie Park Crematorium, Magnolia Chapel,

Delhi Rd, Macquarie Park , NSW 2113

Rituals:- 9:00AM to 11:45 AM

Cremation:-  11:45 AM

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2026 00:00)