Mrs Thavanayaki Balasingam

(Retired Teacher)

Thavanayaki Balasingam

Date of Birth: 09 February 1950 - Deceased: 23 February 2020

காரைநகர் இந்துக்கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும்,தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் முன்னாள் செயலாளரும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப்பரீட்சை ஆணையாளரும்,திறந்த பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளரும்,

காரைநகர் இந்துக்கல்லூரியின் விலங்கியல் ஆசிரியராகவும்,பிரதி அதிபராகவும் பணியாற்றிய பின்னர் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டு காரைநகரின் இடம்பெயர்வின் பின்னர் பாடசாலையை மீளக்கட்டியெழுப்ப அரும் பணியாற்றியிருந்தவரும்,பழைய மாணவியும் ஆவார்.

மேலும்,இவர் வெள்ளவத்தை  சைவமங்கையர் வித்தியாலயத்தின் அதிபராகவும்,உதவிப் பரீட்சை ஆணையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரைச் பிறப்பிடமாகவும்,திக்கரை வீதி,களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து தற்போது வெள்ளவத்தை,கொழும்பில் வசித்து வந்தவருமான, விலங்கியல் பாட ஆசிரியருமான திருமதி தவநாயகி பாலசிங்கம்(தவநாயகி ரீச்சர்) அவர்கள் கொழும்பில் 23-02-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான டாக்டர் அம்பலவாணர் -பரமேஸ்வரி தம்பதிகளின்
அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களானமார்க்கண்டு -அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
அன்னார்மக்கள் வஙகி முகாமையாளர் அமரர் பாலசிங்கத்தின் துணைவியும்,
 
ஜனகனின் அன்புத் தாயாரும் ,
 
தவபாலன்,சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்,தேவகி, சிவபாதம் ஆகியோரின்அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற நாகம்மாவின் சகலியும்,
 
சிறிதரன்,காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின்,பூதபுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 24-02-2020ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பித்து பிறுபகல்3.30 மணியளவில் அத்திரிய பொது மயானத்திற்கு 
பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
தகவல்:-ஜனகன்-மகன்-+94 777877003

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2020 08:41)