Mrs. Thavarani Maheshwaran
Date of Birth: 02 April 1961 - Deceased: 22 September 2025
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி மகேஸ்வரன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மகேஸ்வரன் (முன்னாள் உரிமையாளர் - KVM Recording Bar) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதவன், காலஞ்சென்ற ஆர்த்திகா, மாதவன், காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மூகாம்பிகை, மேலிஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தவராசா, கனகராசா (கனடா), கனகராணி, துவாரகாதேவி (பிரான்ஸ்), சிவதர்சினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, நாகலட்சுமி (கனடா), காலஞ்சென்ற பொன்னம்பலம், ராஜ்குமார் (பிரான்ஸ்), சுபாஷ் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், மனோன்மணி, தவமணி மற்றும், பராசக்தி, மகாதேவன், காலஞ்சென்ற சிவசக்தி, செல்லம்மா, பரமேஸ்வரி, மனோகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 145,டச்சு வீதி,
சாவகச்சேரி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
