திருமதி. தவராசா சாரதாதேவி
தோற்றம்: 11 மே 1950 - மறைவு: 02 மே 2026
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா சாரதாதேவி அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - மங்கையர்கரசி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவராசா அவர்களின் (முன்னாள் பிரதி அதிபர் - யாழ். இந்துக்கல்லூரி) மனைவியும்,
கிருபாலினி, கிருபாகரன், பிரபாகரன் (முகாமைத்துவ உதவியாளர் - யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிமலன் (Do, வலி மேற்கு பிரதேச செயலகம்), வித்தியா, நிர்திகா ஆகியோரின அன்பு மாமியாரும்,
விஷ்ணுகா, விஷ்ணுஜன், தீபிகன், பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காந்திமதி, சுத்தானந்தன், சந்திரமணிதேவி, நித்தியானந்தன், சரோசினிதேவி, காலஞ்சென்ற சதானந்தன், பாலமீரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலட்சுமி (கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஜெயலட்சுமி, காலஞ்சென்ற வரதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
