திருமதி. தவராசா தங்கரட்ணம்

(சித்தவைத்திய கலாநிதி)

தவராசா தங்கரட்ணம்

தோற்றம்: 30 அக்டோபர் 1949 - மறைவு: 26 ஜனவரி 2026

யாழ். பளை வீமன்காமம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும, வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா தங்கரட்ணம் அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி (சித்த வைத்திய கலாநிதி) - அசுபதி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

தவராசா (ஓய்வுநிலை கிராம சேவையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

குமரன் (ஆசிரியர் - மானிப்பாய் இந்துக்கல்லூரி), அருள்குமரன்(ஆசிரியர் - யாழ். மத்திய கல்லூரி), உமா (ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மயூதரன் (சிறைச்சாலை திணைக்களம்), மதுரா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், யாழ் வலயக்கல்வி அலுவலகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தன்சியா, ஆர்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன் தோப்பு இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

*******************

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அவர்களின் பாசம்மிகு தாயார் வைத்தியர், திருமதி தவராசா தங்கரட்ணம் (சித்தவைத்திய கலாநிதி RIMP 13963, Dr. சின்னத்தம்பி மருத்துவமனை பளை வீமன்காமம் மாவிட்டபுரம்) அவர்கள் இயற்கையெய்திய செய்தியறிந்து மிகவும் கவலையடைகிறோம்.

அன்னாரின் பிரிவால் மீளாத் துயரடைந்துள்ள குடும்பத்தினர் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருக்கு எமது கண்ணீரஞ்சலிகளை செலுத்துகின்றோம்.

அன்னாரின் ஆன்மா தில்லைக்கூத்தனின் திருவடிகளில் பேரின்பமடையப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

இங்ஙனம்:-

சைவப்புலவர் சிகா. கமலநாதன் (தலைவர்)

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்,

பலாலி வீதி, கந்தர்மடம்,

யாழ்ப்பாணம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2026 06:50)