திரு. தவரத்தினம் (தவம்) காசிப்பிள்ளை (ஐயாத்துரை)
மறைவு: 15 செப்டம்பர் 2025
யாழ். நல்லூர் ராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தவரத்தினம் காசிப்பிள்ளை அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை (ஐயாத்துரை - இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர், சந்தை குத்தகை) - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
இராசரத்தினம், வசந்தா, அரசரத்தினம் (குட்டி - ஜேர்மனி), வினிதா, குணரத்தினம் (குணம் - பிரித்தானியா), சிவரத்தினம் (சிவம் - பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
