திருமதி. தவேஸ்வரி நல்லநாதன்
தோற்றம்: 23 ஏப்ரல் 1949 - மறைவு: 23 ஜனவரி 2026
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவேஸ்வரி நல்லநாதன் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
நாகமுத்து செல்லையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நல்லநாதன் (ஓய்வுபெற்ற உதவிக் கணக்காளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சோமசேகரசுந்தரம், தேவேந்திரன், பாலசுப்பிரமணியம், விஜயராணி, சபாநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரபோதரன், கோபிதரன், ஹரேன்தரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விபுலி, சுமங்கலி, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனிகா, தியானா, அத்விகா, அகரன், ஆதிரா ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 6:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-01-2026 திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
