வைத்திய கலாநிதி. தயாளினி திலீபன் (நின்னா)

(சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்)

தயாளினி திலீபன் (நின்னா)

தோற்றம்: 17 செப்டம்பர் 1972 - மறைவு: 18 மார்ச் 2026

யாழ். அராலி மத்தி கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  தயாளினி திலீபன் அவர்கள் 18-03-2026 புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் - சாந்தநாயகி தம்பதியினரின் பாசமிகு இளைய மகளும்,

சுகிர்தன் (விரிவுரையாளர், ரஜரட்டை பல்கலைக்கழகம்), சுவித்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரியதர்சினியின் (Accountant) பாசமிகு மாமியாரும்,

குமுதினி (இலண்டன்), கருணாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மோகனதாஸ், தீபா (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

செந்தில் தாஸ் (இலண்டன்) இன் சித்தியும்,

திஸா, தரணி (இலண்டன்) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரது திருவுடல் இறுதி அஞ்சலிக்காக 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் சுண்டிக்குளியில் உள்ள அன்னாரது இல்லத்திலும், பின்பு 11.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீடத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 27/28, புங்கன்குளம் வீதி,

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2026 00:00)