Mrs. Thayanithi Ravichandran

Thayanithi Ravichandran

Date of Birth: 15 April 1969 - Deceased: 15 April 2026

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாநிதி ரவிச்சந்திரன் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராசா -அருளம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பூமணி - நடராசா தம்பதியினரின் மருமகளும்,

ரவிச்சந்திரனின் பாசமிகு மனைவியும்,

கலைப்பிரியா, சாருகா. சுபாங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிசாந்தன், தியேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன், சிவநாதன், சதானந்தன், நிற்குணானந்தன், சிவாநந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2026 00:00)