திருமதி. தயாபரன் கமலநாயகி

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

தயாபரன் கமலநாயகி

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1964 - மறைவு: 16 மே 2025

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாபரன் கமலநாயகி அவர்கள் 16‐05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான நடராசா - சங்குபதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) - மரகதவல்லி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தயாபரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செபமாலைமேரி, பிலவேந்திரன் மற்றும் விஜயதேவி, நாகலெட்சுமி, சுமதி, வாணி, சீலன், விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசா, கண்மணி, ராமர், ராயூ, ராஜன், றொகான், யோகேஸ்வரி, குயின்ரஸ், இரத்தினேஸ்வரன் ரஞ்சினி, இரத்தினேஸ்வரி, ராஜினி, ரஜனி ஆகியோரின் மைத்துனியும்,

திவ்யாவின் சிறியதாயும்,

கேதன், மித்ரா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16‐05‐2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் (இல- 11/51, பரகும்பா பிளேஸ், வெள்ளவத்தை) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு, 18‐05‐2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/05/2025 04:00)