Mrs. Theivendran Mahenderarani
(பெண் பரிசாரகர், சங்கானை,பண்டத்தரிப்பு , காரைநகர் பிரதேச வைத்தியசாலை)
Date of Birth: 01 February 1972 - Deceased: 16 March 2024
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், தேவாலய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வேந்திரம் மகேந்திரராணி (கலா) அவர்கள் நேற்று 16-03-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தெய்வேந்திரம் (ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனந்தகோபன் (ஆனந்தன்), ஆதித்தியன் (ஆதி), ஆதவன் (மாணவன் யா /சங்கானை சிவப்பிகாச ம.வி), அரிராம் (மாணவன் யா/ இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலச்சந்திரன (சந்திரன்), ராஷினி (பிள்ளையம்மா), பூலோகம் (பெற்றி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 17-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேவாலய வீதி சங்கானையிலுள்ள அன்னாரின் இல்லதிதில் நண்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சங்கானை கரைச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
