திருமதி. திரேசம்மா அல்பிறட்

திரேசம்மா அல்பிறட்

தோற்றம்: 03 ஜூலை 1939 - மறைவு: 20 டிசம்பர் 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திரேசம்மா அல்பிறட் அவர்கள் 20-12-2025 சனி்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கோவிந்தர் செல்லர் தம்பதியினரான் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற அல்பிறட் செல்லர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னமேரி, லூர்த்தம்மா, தேவசகாயம், மனுவேற்பிள்ளை மற்றும் இருதயராயா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அல்வினா (ஐக்கிய அமெரிக்கா), அலன்சீஸ் (கனடா), அலெக்ஸ் சர்மிளா (பிரித்தானியா), அல்கீஸ் (ஐக்கிய அமெரிக்கா), அமலதாஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்ரு (பொனி-ஐக்கிய அமெரிக்கா), கமலநாதன் (பிரித்தானியா), சுகந்தி (கனடா), துர்க்கா (ஐக்கிய அமெரிக்கா), இமல்டா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

மொகில்ரன், கீகன், சிவ்யா, விரோஷன், ஆரேஷ், அவானா, எட்றியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-12-2025 சனிக்கிழமை காலை 7:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Aidan Roman Catholic Church (3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, 11:30 மணியளவில் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2025 00:00)