திருமதி. தேசிகன் செம்மனச்செல்வி
தோற்றம்: 15 பெப்ரவரி 1963 - மறைவு: 18 செப்டம்பர் 2024
வவுனியா ஓமந்தையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தேசிகன் செம்மனச்செல்வி அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று உடல் நலக்குறைவினால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கும்பகோணம் தேசிகனின் பிரிய இணையாளும்,
வடகோவை வரதராஜன், காலஞ்சென்ற வாசுகி நவரட்ணம், யோகராஜன் (வளவன்), காலஞ்சென்ற ராஜராஜன் (கோமகன்), சிவசக்தி (றோசி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20-09-2024 வெள்ளிக்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஓமந்தை பொலிஸ் நிலைய அருகாமையில் உள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பு திட்ட 08 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லமான பண்பகத்தில் (இலக்கம் UY) நடைபெற்று, புகழுடல் ஓமந்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
