Mr. Thevarajapillai Thiyagalingham

(உரிமையாளர் - Siva Brothers, Colombo-12)

Thevarajapillai Thiyagalingham

Date of Birth: 07 July 1957 - Deceased: 01 May 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தெவராயப்பிள்ளை தியாகலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கரு. தெவராயப்பிள்ளை - தைலம்மை அம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்ற கோமரையைச் சேர்ந்த தே.மாரியாப்பிள்ளை - விஜயலக்‌ஷ்மி தம்பதியினரின் மருமகனும்,

விவேகராணி (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், ஶ்ரீசிவதேவன் (Siva Brothers, Colombo-12), அருண் கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகையா (Transteel Merchants, Colombo-12), சுந்தரலிங்கம் (Siva Brothers, Colombo-12), காலஞ்சென்ற சிவலிங்கம், அமிர்தலிங்கம் (Michekin Hardware Centre, Colombo-12) ஆகியோரின் சகோதரரும்,

சுபத்திரா, காலஞ்சென்ற காஞ்சனா, வசந்தி ஆகியோரின் கொழுந்தனாரும்,

சரவணராஜா (கம்பூட்டர்), பிரபாகரன் (ஜேர்மனி) ஆகியோரின் மாப்பிளையும், 

ராதிகாவில் (சென்னை) மைத்துனரும்,

சுரேஷ்குமாரின் (சென்னை) சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழுவுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் இல-547-1/B, காலி வீதி, கொழும்பு-06 அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 05-05-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.30 மணியளவில் திருவுடல் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2025 04:00)