திருமதி. தேவராசா இரத்தினபாக்கியம்
தோற்றம்: 12 மார்ச் 1942 - மறைவு: 15 செப்டம்பர் 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவாலி சம்பந்த பிள்ளையார் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா இரத்தினபாக்கியம் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தி - வள்ளி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னார் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மசீலன் (ஜேர்மனி) அவர்களின் அன்புத் தாயாரும்,
சுமித்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,
பவித்திரன், பவதாரணி, பகலவன், கலைவிழி, கனிமொழி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்ற தம்பிராசா, பொன்னுத்துரை, தேவராசா, தவமணி, செல்வராசா (சின்னராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ், முருகேஸ், சின்னராசா, சிவக்கொழுந்து, சின்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு பெரிய தாயாரும்,
விமலநாயகி அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
