திருமதி. திலகமணி (பாப்பா) குமரகுருபரன்

திலகமணி (பாப்பா) குமரகுருபரன்

தோற்றம்: 20 மே 1940 - மறைவு: 02 ஜூலை 2024

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஊர்காவற்றுறை கரம்பொன், கொழும்பு, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான திருமதி. திலகமணி (பாப்பா) குமரகுருபரன் அவர்கள் 02-07-2024 செவ்வாய்கிழமை அன்று தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. நமசிவாயம்- நாகம்மா தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-பகவதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை குமரகுருபரன் (சாவகச்சேரி நகரசபை சுகாதார பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி சதாசிவம், யுகநாதன், கேசவன் மற்றும் மகேசன் ராணி (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார் (கனடா), திலகராணி (ஜேர்மனி), பரமேஸ்வரன் (கனடா), உருத்திராணி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி, உருத்திரசீலன்-நவரட்ணதேவி, குகதாஸ் மற்றும் திருமதி. கன்னிகா பரமேஸ்வரி-ராஜகோபால் (லண்டன்), திருமதி. தனலக்ஷ்மி-நடேஸ்வரன் (கனடா), திருமதி. பிருந்தாதேவி-குகன் (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,

கோகிலா (கனடா), யோகேஸ்வரன் (யோகன்-ஜேர்மனி), சசிகலா (கனடா), குகதாஸ் (குகன்-கனடா) ஆகியோரின் மாமியும்,

சிந்தூரி, கஸ்தூரி, காயத்திரி. சங்கர். கவிநயன் (கவி). சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மீரா, மாயா ஆகியோரின் பூட்டியமாவார்.

அன்னாரின் புகழுடல் 737 Dundas Street East, Mississauga, Ontario வில் அமைந்துள்ள St.John’s Dixie Crematorium தில் 06-07-2024 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணி முதல் மாலை 7:45 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2024 04:00)