திருமதி திலகவதி திருநாவுக்கரசு

திலகவதி திருநாவுக்கரசு

தோற்றம்: 19 மார்ச் 1933 - மறைவு: 16 ஜனவரி 2020

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் பழம்றோட்டை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திலகவதி திருநாவுக்கரசு அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
 
முரளீதரன், கிரிதரன், ஸ்ரீதரன், கலாதரா, வசுந்தரா(லதா), சுமித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பேரின்பநாயகி, திலகா, ஜெயவதனி, காலஞ்சென்றவர்களான பிரபாகரன், புஸ்பநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
புனிதவதி, காலஞ்சென்ற சண்முகநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற கமலாதேவி, இலட்சுமிதேவி(இந்திரா), தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சண்முகசேகரம், வரதராஜா ஆகியோரின் அன்பு அண்ணியும்,
 
காலஞ்சென்ற ஆறுமுகம், அகிலத்திருநாயகி, காலஞ்சென்ற கணேசலிங்கம், குணரத்தினம், காலஞ்சென்ற மகேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற தங்கராணி, சிவஞானசுந்தரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
 
யசோதரா, சசிதரா, சபேசன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
 
சுவிலதன், கல்பலதா(கல்பனா), காலஞ்சென்ற சேரலதன், பிரகலாதன், பிரேமலதன், சிவானுஜா, சேயோன், சிவப்பிரியா(அபி), சுபேந்திரன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
 
குமரன், காந்தன், சயந்தன், வரதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
திலக்‌ஷன், சஜீவன், மதுஷன், லக்‌ஷிகா, தனுஷியன், கௌரீசியன், ஆதிதன், அக்‌ஷாயினி, அகர்ஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
Address: இல.66/2, பழம்றோட், கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
 
தொடர்புகளுக்கு:-
 
வீடு Phone : +94 21 222 8834
ஜெயவதனி - மருமகள் Mobile : +1 647 709 3892 
முரளீதரன் - மகன் Mobile : +1 647 675 6204 
ஸ்ரீதரன் - மகன் Mobile : +1 647 764 2007 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2020 04:00)