Mrs. Thilageswary Arulampalam
Date of Birth: 14 September 1934 - Deceased: 26 June 2025
யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா - பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் (கணக்காளர் - யாழ். ஜக்கிய வியாபாரச் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்திரன் (நோர்வே), ஜெயச்சந்திரன் (இலண்டன்), ஜெயபாலன் (Regional Manager , Northern Region, Commercial Bank), ஜெயராணி நேருஜி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. ராஜேஸ்வரி ராஜகாரியர், புவனேஸ்வரி துரைராஜா, மகேஸ்வரி பரமநாதன், சபாநடேசன், பரமேஸ்வரி ஆறுமுகம், Dr. சதானந்தன், பாக்கியநாதன், சரோஜினி துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரமாலா ஜெயந்திரன், சுஜாத்தா ஜெயச்சந்திரன், தர்மினி ஜெயபாலன், நேருஜி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்துஜா ஜெயவர்மன், லாவண்யா சங்கீர்த்தன், பிரணவன், கஜாநனன், அனந்தயன், அர்ச்சினி, நிலானி, பிரீதினி ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
இமையா, இசையா, தூரிகா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை இல - 206 அரசடி வீதி, கந்தர்மடம் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
