Mr Thillaiambalavanar Gopalakrishnan

(விவாக இறப்பு பிறப்பு பதிவாளர், உரிமையாளர் - சபேஸ் ரேடர்ஸ், புத்தூர், சமாதான நீதவான், நிரந்தர தர்மகத்தா உறுப்பினர் யாழ் சோமாஸ்கந்த கல்லூரி புத்தூர்)

Thillaiambalavanar Gopalakrishnan

Date of Birth: 29 October 1968 - Deceased: 05 May 2025

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லை அம்பலவாணர் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலவாணர் - சிவகாமிப்பிள்ளை  தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், 

காலஞ்சென்ற ஜெகநாதன் - சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுதாஜினி (ஆசிரியை -யாழ். சோமாஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

துவாரகன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சம்பந்தன், விமலன் (பணிப்பாளர் - வடமாகாணம் காணி சீர்திருத்த ஆணைக்குழு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சுகுமார்-ஜெயசிறி (ஜேர்மனி), தற்பரன் (சட்டத்தரணி), றமிலாதேவி, நளினி, சந்தானலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-05-2025 புதன்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, திருவுடல் புத்தூர் கிந்துசிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

சந்திரோதயம் 

புத்தூர் மேற்கு, புத்தூர்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"அமைதியின் மறுவடிவம் புகழ்பூத்த பெருமைமிகு புத்தூரில் கொடைவள்ளல் வழிவந்த எம் உறவே….. *அம்பலவாணர் கோபாலகிருஷ்ணன் * பிறப்பிற்கும் இறப்புண்டு என்கின்ற இயற்பியலில் உடல்நலக்குறைவால் இறைவனின் திருவடி சேரந்தின்று எல்லோரையும் கண்ணீரில் முகிழவைத்து அமைதியாக உறங்குகின்ற நொடிப்பொழுதில்…. விழிநீர் சொரிந்திங்கு பேசுவதற்கு வார்த்தைகள் பிரசவிக்க மறுக்கையிலே வாழ்வின் பயணத்தை மீட்டிடவே வழிதெரியாமல்வார்த்தைகளின்றித் தவிக்கின்றேன்…. காந்தியத்தின் வழிநின்று வாழ்ந்திட்ட என்னுறவே………. உந்தன் வழிதழுவும் பிள்ளைகளும்….. மனைவியும்…….. குடும்பமும்……….. உறவுகளும் …….. உந்தன் பிரிவின் துயரத்தில் மீண்டுவந்து உந்தன் நினைவுகளை கனவுகளை நிறைவு செய்து வாழ்ந்திடவே வேண்டிநின்று இறைவனையும் வேண்டுகிறேன் ஆத்மசாந்திவேண்டி……. நன்றிகள். இளங்கோ.(கண்ணன்)"
- சண்முகலிங்கம் இளங்கோ  (இலண்டன், 07/05/2025 07:03)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2025 00:17)