Mrs. Thillaimalar Parameswaran
Date of Birth: 26 December 1965 - Deceased: 21 December 2024
யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Fredericia - டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லைமலர் பரமேஸ்வரன் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, புஸ்பராசலட்சுமி, கருணானந்தன் மற்றும் செல்வராஜா, வரதலெட்சுமி, அன்னலெட்சுமி, பாக்கியலெட்சுமி, முத்துலெட்சுமி, முருகானந்தம், யோகானந்தன், பேரின்பநாதன், உதயராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், மகாலிங்கம், நாகராசா, மங்களநாதன் மற்றும் புஸ்பவதி, ஜஸ்மின், ஜமுனா, மீரா, சண்முகப்பிரியா, காலஞ்சென்ற நாகராசா, தர்மகுலசிங்கம், நடேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 -12.00 மணி வரை (Silkeborgvej Silkeborgvej 40, 8700 Horsens, Denmark) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
