Mrs. Thillaiyambalam Yoganayaki (Gnam)

Thillaiyambalam Yoganayaki (Gnam)

Date of Birth: 24 February 1947 - Deceased: 19 December 2024

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் இல.95 இரண்டாம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் யோகநாயகி அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தருமலெட்சுமி, தெட்சணாமூர்த்தி, கமலாம்பிகை, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவராசா (சிவா), பற்குணராசா (தயா-மாவீரர்), மகேந்திரராசா (ஜெயா), கௌசலா (லேனா சில்க் உரிமையாளர்), கேசவராசா (ஐயனார்-பிரான்ஸ்), குலேந்திரராசா (உதயன்), கனகேந்திரராசா (நந்தன்- ஆசிரியர்), ஜெயராசா( செல்வன் - தில்லைஞானம் ரெக்ஸ் உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றஞ்சினி (ஆசிரியை), காலஞ்சென்ற முருகமூர்த்தி, வரதராணி (ஆசிரியை), குமுதினி  (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரியா, பிரியங்கா, யதுர்சா, மிதுர்சன், நிலக்ஷன், நிலக்சிகா, சாணுஜன், பவித்திரன், அபிரங்கா, சானியா, அட்சயன், அஷ்வின், டிஷான், டனுஷ் ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செட்டிகுளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2024 00:00)