திரு. தில்லையம்பலம் யோகராஜா

தில்லையம்பலம் யோகராஜா

தோற்றம்: 10 ஜூன் 1952 - மறைவு: 06 செப்டம்பர் 2025

யாழ். நாவலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் யோகராஜா அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திலையம்பலம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராசையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜசிறிவத்சலா (சலா) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தி, காலஞ்சென்ற கஜேந்திரன் (லக்சன்), கஜமுகன் (டினோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரகுதாசன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தலையசிங்கம், காலஞ்சென்ற செல்வராசா, சத்தியபாமா, புஸ்பராணி, காலஞ்சென்ற அரியராசா, தெய்வேந்திரராசா, ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராஜேந்திரம், காலஞ்சென்ற இராஜயோகம், இராஜமோகன், இராஜசிறிப்பிரியா (சிறி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாய்கீர்த்தி, யாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல்12:00 மணியளவில் திருவுடல் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

19, உப்புக்குளம் வீதி,

கொழும்புத்துறை,

யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 04:00)