திருமதி. தினகரன் இராஜேஸ்வரி

தினகரன் இராஜேஸ்வரி

தோற்றம்: 27 நவம்பர் 1946 - மறைவு: 11 செப்டம்பர் 2024

யாழ்.கொக்குவில் பிரம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் கோவில் வடக்கு வீதியை வசிப்பிடமாகவும், Colombes-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தினகரன் இராஜேஸ்வரி அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சோமநாதன்-இராசமணி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தினகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

குமுதினி, ரஜனி, துஷிகரன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற முருகதாஸ், ராஜ்குமார், சோபி, ரங்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தினேஷ், நிவேதா, ஆரோன், அஜினா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, மங்களேஸ்வரி, சண்முகநாதன், திருச்செல்வம், சத்தியநாதன் மற்றும் பரமேஸ்வரி, சர்வேஸ்வரி, சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பொன்னம்பலம், றஜீனா, புலேந்திரன், பாமதி, தயாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, கலாவதி மற்றும் ரவீந்திரன், ரூபாவதி, கருணாவதி, நந்தாவதி, சுவேந்திரன், தயாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அமரசிங்கம், கிருஸ்ணபாலா மற்றும் நகுலேஸ்வரி, குலநாயகம், பூலோகசிங்கம், பஞ்சலிங்கம், இராஜஶ்ரீ ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-09-2024 சனிக்கிழமை முதல் 16-09-2024 திங்கட்கிழமை வரை பிற்பகல் 3.00-4.00 மணி வரை Crematorium des joncherolles villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-09-2024 புதன்கிழமை காலை 9.00-11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2024 04:00)