திருமதி. திருச்செல்வம் செல்வநாயகி

திருச்செல்வம் செல்வநாயகி

தோற்றம்: 01 நவம்பர் 1949 - மறைவு: 09 ஆகஸ்ட் 2026

யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருச்செல்வம் செல்வநாயகி அவர்கள் நேற்று 09-04-2026ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அன்னம்மா தம்பதியரின் பாசமிகு கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னாச்சிபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
றஞ்சினி (ஜேர்மனி), கனகசபை, சம்பத்தமூர்த்தி, தயாளினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
முத்தழகன் (ஜேர்மனி), தர்சினி, ஜஜீவா, வரதீஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
விசாகபெருமாள், சிதம்பரநாதன், காலஞ்சென்ற ஜீவகுமாரி, சிவக்கொழுந்து, ஏரம்பமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
அமிர்தன், அபிரன், அச்சுதன், லக்சயன், கஜானி, சஞ்சயன், பவித்திரன், கேசவன், திவானுயா, ஹரித், ஹரினிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 10-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு  எடுத்துச் செல்லபபபடும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2026 04:02)