திருமதி. திருஞானம் தவமணி

திருஞானம் தவமணி

தோற்றம்: 12 ஜூலை 1943 - மறைவு: 12 ஆகஸ்ட் 2025

யாழ். சுன்னாகம் புனித அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. திருஞானம் தவமணி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. வடிவேலு தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

திரு. திருமதி. யோசப் யுவக்கீன் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோசப் திருஞானம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானசீலன் (முகாமையாளர் - யுனைட்டர் பியூவால் மாட், கிளிநொச்சி), டார்வின் ஜெயசீலன் (ஆசிரியர் - உடுவில் மகளிர் கல்லூரி), ஞானறோஜினி (ஆசிரியை - ஏழாலை சிறீமுருகன் வித்தியாலயம்), றெகன்சியா ஞானவதனி (ஆசிரியை - ஏழாலை மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மொறின் (ஆசிரியை - குளமங்கால் றோ.க.த.க. பாடசாலை), மரிய கொன்சலீனா, டொமினிக் ஜீவா (ஆசிரியர் - சாவகச்சேரி இந்துக் கல்லூரி), அலெக்ஸ் பெனடிக்ற் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யூக்கிரேசியா (மாணவி - பல்கலைக்கழகம் சப்புரகமுவ - விவசாயபீடம்), கிறிஸ்ரியன் ஒஸ்ரேட் (SLIIT Northern Uni), கிங் றொசாரியன் (குருமட மாணவன் - Salvatorian), ஐலின் (மாணவி - உடுவில் மகளிர் கல்லூரி), லிடியா (மாணவி - உடுவில் மகளிர் கல்லூரி), டானியலா (மாணவி - உடுவில் மகளிர் கல்லூரி), யவ்னியா (மாணவி - உடுவில் மகளிர் கல்லூரி), பிறின்ஸ் றொசாரியன் (மாணவன் - புனித பத்திரிசியார் கல்லூரி), தொம்சன் (மாணவன் - பரியோவான் கல்லூரி), டெவின்பஸ்கால் (மாணவன் - மகாஜனக் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகேந்திரராசா, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசதேவி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் 13-08-2025 புதன்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்று, சரீரம் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2025 04:00)