திருமதி. திருமலர் சிவசம்பு (மணி)
தோற்றம்: 25 டிசம்பர் 1943 - மறைவு: 10 மார்ச் 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் - வட்டுக்கோட்டை மேற்கு, கொழும்பு - வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருமலர் சிவசம்பு அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு - பாருப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
முரேஸ் (சுதன் - பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காந்தபவானியின் அன்பு மாமியாரும்,
சுவாத்தியின் ஆருயிர் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பிரகாசவதி, பரமேஸ்வரன் (அப்பு - மலேசியா), பத்மநாதன் (கண்டு - மலேசியா), ராஜேஸ்வரி (கிச்சி - மலேசியா), ஈஸ்வரரூபா (ரதி - அவுஸ்திரேலியா) மற்றும் திருநற்செல்வி (குஞ்சு - அவுஸ்திரேலியா), சிவபாலன் (சிவம் - பிரித்தானியா), பஞ்சேந்திரன் (ஜோதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-03-2025 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
