திரு. திருமேனி தயாளன்
(மஸ்கெலிய ஜனனி ஹாட்வெயார் ஸ்தாபகர், உரிமையாளர்)
தோற்றம்: 15 ஜனவரி 1952 - மறைவு: 04 ஜூலை 2024
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மஸ்கெலியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருமேனி தயாளன் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருமேனி-பத்மாவதி தம்பதியினரின் மூத்த புதல்வனும்,
தங்கராசா-காலஞ்சென்ற கனகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
ஞானகௌரி (கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி (கனடா), மதுரா (மஸ்கெலியா), மித்ரா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமித் (கனடா), மகேஸ்குமார் (மஸ்கெலியா- மகேஸ் ரேடேர்ஸ், ராகேஷ் மெகா மார்ட் உரிமையாளர்), விஜேயானந்த் (கொழும்பு- Maharaja Food Proficts, G.T.V Parcel.lk) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கைலி, ராகேஷ், ரித்திக்கா, ரித்திக், ஆதியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரஞ்சனிதேவி (கொக்குவில்), தர்மதாசன் (பிரான்ஸ்), தர்மசேகர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற முருகானந்தன், சாந்தகௌரி (சுவிஸ்), அகிலானந்தன் (சுவிஸ்), ஜெயானந்தன் (பிரான்ஸ்), சதானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 06-07-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
