திருமதி. திருநாவுக்கரசு லீலாதேவி

திருநாவுக்கரசு லீலாதேவி

மறைவு: 07 ஏப்ரல் 2026

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான் இளவாலையினை வாழ்விடமாகவும், மூங்கிலாறு தெற்கினை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு லீலாதேவி அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா -  சோழர் பெரியதம்பி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு துணைவியும்,

தயாபரன் (இலண்டன்), தயானந்தன், அமுதக் கலைஞன், சுகன்யா ஆகியோரின் அன்பு தாயாரும்,

வசந்தி (இலண்டன்), மகேந்திரராஜா, ஆஞ்சநேயர் கல்யாண் (மூங்கிலாறு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தன் (இலண்டன்), மதிவாணி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2026 புதன்கிழமை அன்று மூங்கிலாறு தெற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொழுந்துப்பிளவு தேராவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2026 00:00)