திருமதி. திருநாவுக்கரசு இராஜேஸ்வரி

(ஓய்வுபெற்ற இலிகிதர் - தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனம், வாழைச்சேனை, விவாக பதிவாளர், சமாதான நீதிவான்)

திருநாவுக்கரசு இராஜேஸ்வரி

தோற்றம்: 06 நவம்பர் 1961 - மறைவு: 07 ஏப்ரல் 2025

யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு இராஜேஸ்வரி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் - வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், கணபதிப்பிள்ளை - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

திருநாவுக்கரசு (தேசிய கடதாசி கூட்டுத்தாபன உத்தியோகத்தர், பணிப்பாளர் - சிவனருள் இல்லம், மன்னார், சமாதான நீதிவான்) அவர்களின் ஆசை மனைவியும்,

சுதாகரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் -  சுகாதார அமைச்சு), கஜகரன் (பொறியியலாளர், விரிவுரையாளர் - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனுஷா (ஆசிரியை - கிளி.பரந்தன் மகா வித்தியாலயம்), எழிலரசி (பொறியியலாளர், விரிவுரையாளர் - இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திரிஷ், அபிஷ்கா, அனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-04-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:- 

இல- 16/80, இராஜபவனம்,

கரணவாய் கிழக்கு, கரவெட்டி.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2025 04:00)