Mr. Thirunavukarasu Shantharuban

Thirunavukarasu Shantharuban

Date of Birth: 03 June 1975 - Deceased: 23 June 2026

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வட்டக்கட்சி, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருநாவுக்கரசு சாந்தரூபன் அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு - முத்துலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

நந்தினி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவாயினி (கனடா), சானுயா (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ,

சாந்தகுமார், சாந்தினிதேவி (இலங்கை), சதீஸ்குமார் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

திகதி: 14-07-2026 செவ்வாய்க்கிழமை, 15-07-2026 புதன்கிழமை

நேரம்: பிற்பகல் 15.00 மணிமுதல் 16.00 மணிவரை

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse

இறுதிக் கிரியைகள்:-

திகதி: 16-07-2026 வியாழக்கிழமை

நேரம்: காலை 09.30 மணிமுதல் 11.15 மணிவரை

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse

தகனக் கிரியைகள்:-

அன்றைய தினமே மாலை 13.15 முதல் 14.00 மணிவரை

2 Rue du Pré de Vornat, 77165 Saint Soupplets

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2026 00:00)