திரு. திருநாவுக்கரசு சுந்தரலிங்கம்

(முன்னாள் தலைவர் ஊர்காவற்றுறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், முன்னாள் தலைவர் யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை, யா.மா.து.கூ சங்கம் மற்றும் யா.மா.கூ.கிராமிய வங்கிகளின் சமாசம் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர்)

திருநாவுக்கரசு சுந்தரலிங்கம்

தோற்றம்: 21 பெப்ரவரி 1956 - மறைவு: 06 ஆகஸ்ட் 2025

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், இல-19/1, ஓடை லேன், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு சுந்தரலிங்கம் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு - இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,

வேலணை மேற்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - இந்திராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவராணி அவர்களின் ஆருயிர் கணவரும்,

அமிர்தலிங்கம் (கனடா), சொர்ணலிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான இன்பலிங்கம், அமிர்தவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பிரவீணா (இலங்கை வங்கி, யாழ்ப்பாணம்), விருசன் (கனடா), கிர்ஷாந்தன் (ஆசிரியர் - முத்தையன்கட்டு இடதுகரை மகா வித்தியாலயம்), திலஷி (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

சாருமதி (கனடா), அஸ்வினி (யாழ்ப்பாணம்), மகிந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிஷோரா, அபினேஷ், பிரனீத் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,

திக்ஷிகா, பிருதிக்ஷன், சபரீசன் ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,

ஜான்சிராணி, காலஞ்சென்ற டெய்சிராணி மற்றும் முருகதாஸ் (கனடா), புஸ்பராணி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2025 04:00)