Mr. Thirunavukkarasu Senthilnathan

Thirunavukkarasu Senthilnathan

Date of Birth: 12 October 1961 - Deceased: 30 December 2024

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Oberhausen, கனடா - Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு செந்தில்நாதன் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முத்தையா - புஸ்பமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரஞ்சனிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சந்தியா, சுருதி, சந்தனு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிர்மலானந்த் அவர்களின் அன்பு மாமனாரும், செல்வராணி (கனடா), உதயசூரியன் (JP - இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியானந்தசிவம் (கனடா), இந்திரா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவமலர், ஜெயந்தி- பரமேஸ்வரன், கவிதா- ஜெகதீஸ்வரன், தர்மினி- ரவீந்திரநாதன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

ஜமுனாராணி- சிவானந்தன் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

அதர்வா, ஆரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் (Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் (Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 00:00)