Mr. Thiruppathiyapillai Rajendran

Thiruppathiyapillai Rajendran

Date of Birth: 11 May 1963 - Deceased: 30 September 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமத்தை பூர்வீகமாகவும், ஹட்டன் - டிக்கோயா இண்ஜஸ்ட்ரீ தோட்டம் கீழ்பிரிவைப் பிறப்பிடமாகவும், பிளாக்வுட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜேந்திரன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு 12.05 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருப்பதியாப்பிள்ளை - பாப்பி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை - தனபாக்கியா தம்பதியினரின் மருமகனும்,

பரிமிளா அவர்களின் பாசமிகு கணவரும்,

இந்துஜாவின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விஷ்வநாத்பிள்ளை, சரோஜா, ஜானகி, இந்திராணி, யசோதாதேவி, சந்திராதேவி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகசுந்தரம் - பிரேமா தம்பதியினரின் சம்பந்தியும்,

அஸ்வின் (கொழும்பு) அவர்களின் மாமனாரும்,

வினோத், பிரஷாந், நிஷாந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,

நிஷ்வத்தின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-10-2025 புதன்கிழமை அன்று காலை 7.00 மணயிளவில் பண்டாரவளை மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பண்டாரவளை பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2025 04:00)