Mr. Thiruselva Manoranjitham

Thiruselva Manoranjitham

Date of Birth: 20 November 1946 - Deceased: 22 May 2026

"நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன்.

விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்"

2 திமோத்தேயு 4:7

யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவானைப் பிறப்பிடமாகவும், இல- 282/2, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருச்செல்வ மனோரஞ்சிதம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா அலிஸ் - கருணானந்த யோகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிரஜினியின் அன்புத் தந்தையும்,

அல்பிரட் ஜோசப் யூட் அவர்களின் அன்பு மாமனாரும்,

திருச்செல்வராணி, காலஞ்சென்ற திருச்செல்வ மகாலிங்கம், திருச்செல்வ மனோன்மணி, செல்வ சொலமன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சாமுவேல், தவமணி, அமிர்தலிங்கம், சறோஜினி, காலஞ்சென்றவர்களான தங்கப்பிள்ளை, சிவபாக்கியம் மற்றும் சௌந்தரம், காலஞ்சென்ற தியாகராஜா, கமலாம்பிகை, தெய்வநாயகி, கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதிச்செல்வி, சத்தியநாதன், ஜெயந்தன், ஜயந்தினி ஆகியோரின் மாமனாரும்,

வதனா, டோச்சி, ஜனகன், ஜனனி, சாரதாதேவி, குலேந்திரன் ஆகியோரின் சித்தாப்பாவும்,

ஜோய், அஷேல், தனுஷான், கோவீதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் திருக்கோணமலை சென் ஸ்டீபன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+94 77 801 1929

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2026 00:00)