திரு. திருநாவுக்கரசு ஐயாத்துரை
தோற்றம்: 16 ஏப்ரல் 1938 - மறைவு: 16 செப்டம்பர் 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு ஐயாத்துரை அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருக்குமரன், பேரருட்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாரணி திருக்குமரன், தாரணி பேரருட்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாஷா, தர்ஷன், தாருஜன், நதீன், பிரகன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னபூரணம், நிர்மலாதேவி மற்றும் நாகரத்தினம், பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம், அன்னலட்சுமி, பாலசிங்கம், ஆறுமுகம் புஷ்பராணி மற்றும் ராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-09-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
