சிவஶ்ரீ. சண்முக தியாகராஜ சண்முகரத்ன குருக்கள்

(முன்னாள் சுதுமலை அம்மன் கோவில் ஆதீனகர்த்தா, கொழும்பு மருதானை கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலய உதவி குருக்கள்)

சண்முக தியாகராஜ சண்முகரத்ன குருக்கள்

தோற்றம்: 24 ஏப்ரல் 1939 - மறைவு: 28 மார்ச் 2026

யாழ். சுதுமலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஸ்ரீ. சண்முக தியாகராஜ சண்முகரத்ன குருக்கள் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சுதுமலை காலஞ்சென்ரவர்களான தியாகராஜா ஐயர் - நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய இரத்தினாம்பாள் தம்பதியினரின் கனிஷ்ட மகனும்,

காலஞ்சென்ற  பருத்தித்துறை விஜயலக்ஷ்மி அம்மையாரின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான மஞ்சுளா தேவி, சரவணபவ சர்மா மற்றும் சியாமளா தேவி (கனடா), சுமதி (ஜேர்மனி), விஜயஸ்ரீ (கனடா), விக்னேஷ்வர சர்மா (இலண்டன்), கண்ணகி (கொழும்பு) ஆகியோரின் அன்பு தந்தையும்,

நீதிராஜ சர்மா (கனடா), சுப்பையர் (ஜேர்மனி), ஜெயகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மட்டக்களப்பு காலஞ்சென்ற கைலாசநாத சர்மா, மகேஸ்வரி அம்மையார் (டென்மார்க்) சீதாலக்ஷ்மி அம்மா (சுதுமலை) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

Haresh Kumar. Harini, Harshini, Huruparan sharma, Kiritharan sharma, Harini Vithusan, Varnaki, Sutty, Goby, Baby ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் அபரக்கிரியைகள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 4.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் 

முகவரி:-

இல- 421/113, டார்லி வீதி, கொழும்பு-10.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- கண்ணகி (மகள்).

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2026 00:00)