Mr. Thiyagarajah Keetheswarasuthan
(பொறியியலாளர்)
Date of Birth: 03 May 1968 - Deceased: 17 October 2025
யாழ். ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா கேதீஸ்வரசுதன் அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - தவமணிதேவி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா - நாகபூஷணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவானி (மருந்தாளர் - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிராம் (Sysco LABS), திவாகர் (IIT) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஞானகாந்தி (பிரான்ஸ்), ரவிச்சந்திரராஜன் (கனடா), விமலராஜா (பிரான்ஸ்), பிரியானி (கொழும்பு) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
