Mr. Thiyagarajah Premakanthan
(Teacher)
Deceased: 05 November 2025
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல.674, 7ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சியை வதிவிடமாகவும், தற்போது தசரதன், சோரன்பற்று மாஞ்சோலை முருகன் கோவிலடி பளையில் வசித்து வந்தவருமான திரு. தியாகராசா பிரேமகாந்தன் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா (ஓய்வுநிலை அதிபர் - யா. புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்) - தங்கம்மா (ஓய்வுநிலை அதிபர் - கிளி. இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயம் ) தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
செல்வராசா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஷஜனி (ஆசிரியை - கிளி. மாசார் அ.த.க. பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,
கவிநயன் அவர்களின் அன்புத்தந்தையும்,
கலையரசி (ஓய்வுநிலை பிரதி அதிபர் - கிளி. மத்திய ஆரம்ப வித்தியாலயம்), காலஞ்சென்ற பத்மகாந்தன் (சுவிஸ்), காலஞ்சென்ற கலைச்செல்வி (கனடா), கலைவதனி (கனடா), ஆகியயோரின் அன்பு சககோதரனும்,
காலஞ்சென்ற செல்வராசா (ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் - கிளிநொச்சி கல்வி வலயம்), ஜெயகெளரி (லதா-சுவிஸ்), லோகநாதன் (கனடா), தர்மராசா (பொறியியலாளர்-கனடா), வினோத், ஜனனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பளை மாசாரிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இராமநாதபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
