Mr. Thiyagarajah Pushpanathan

(Former Businessman)

Thiyagarajah Pushpanathan

Date of Birth: 26 June 1944 - Deceased: 19 October 2024

யாழ், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ், சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா புஸ்பநாதன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா-சரஸ்வதி தம்பதியினரின் இளைய புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான சீனிவாசகம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

பத்மாவதி (ஓய்வு பெற்ற ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜானகி, ஜனனி, ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மசிறி, வாகீசன், யாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுவன், மகிஷா, விகாஷ், வைஸ்ணி, வருணீஸ், சாயீஷ், சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பரமநாதன், கயிலநாதன், காலஞ்சென்ற ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பத்மினிதேவி, சோமசுந்தரம் மற்றும் செல்வராணி, காலஞ்சென்றவர்களான தேவராஜா, மங்கையர்க்கரசி மற்றும் சண்முகராஜா, கனகராஜா, பஞ்சாட்சரதேவி, ஆனந்தராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், மகேஸ்வரி மற்றும் பழனிநாதன், சந்திரமணி, காலஞ்சென்ற பாலேந்திரன் மற்றும் ஸ்ரீ நந்தினி ஆகியோரின் சம்பந்தியும்,

அகிலன், பகீரதி, கலைச்செல்வி, ஐங்கரன், அபிராமி, மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தாப்பாவும்,

சியாமினி, துஸ்யந்தினி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, கோம்பயன் மணல் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வீட்டு முகவரி:

39/4, வைரவர் ஒழுங்கை,

சிவப்பிரகாசம் வீதி,

யாழ்ப்பாணம். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2024 04:00)