திருமதி. தியாகராசா சிவகாமியம்மா

தியாகராசா சிவகாமியம்மா

தோற்றம்: 27 ஜனவரி 1939 - மறைவு: 24 ஜனவரி 2026

யாழ். வருணன் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. தியாகராசா சிவகாமியம்மா அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் பாசமிகு துனணவியும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, சிவஞானரத்தினம், சிவசுப்பிரமணியம், சிவதாசன், வைகுந்தன் மற்றும் சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கோசலையம்மா, சபாநாயகம், பரமேஸ்வரி மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குமரகுருபரன் (பிரித்தானியா), ராகினி, நந்தகுமார் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீதா (பிரித்தானியா), ஜெசி (பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,

ஷஜிந்தன், ஜெஷிந்தன், அக்‌ஷயா, மயூரி சோவியா, சயூரி இசாபெலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2026 புதன்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வருணன் தீத்தாங்குள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2026 19:01)