திருமதி. தியாகராஜா அழகரட்ணம்

தியாகராஜா அழகரட்ணம்

தோற்றம்: 13 ஏப்ரல் 1939 - மறைவு: 28 அக்டோபர் 2024

யாழ். பொன்னாதரை இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா அழகரட்ணம் அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் அன்பு தங்கையும்,

கீத்தா, ஜெயசங்கர், யசோதா, சுஜித்தா, விஜித்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ரவிக்குமார், வரதராஜன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தன், யதூஷன், யாழ்வாணி, திஷானி, தனுஷ்வி ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest in Peace "
- Varathan (Canada , 03/11/2024 18:49)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2024 04:00)