Mrs. Thiyagarajah Balambigai
Deceased: 18 July 2024
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், புது றோட், ஒட்டிசுட்டான், கொழும்பு, மார்க்கம்-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா பாலாம்பிகை அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்,
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம்-சௌந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா-நாச்சான் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னத்துரை-அன்னப்பிள்ளை தம்பதியினரின் வளர்ப்பு மகளும்,
வசந்தராதேவி, நகுலேஸ்வரி, கலாவதி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
குலேந்திரபாபு (லண்டன் ), ரவீந்திரன் (கனடா), காலஞ்சென்ற வரேந்திரன், சிவனேந்திரன் (கண்ணன்-கனடா), சியாமலா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சித்திரா, திலகவதி (அம்பிகா), தேவஜனனி (ராஜி), ஜெம்ஸ், முரளிதரன் ஆகியோரின் மாமியாரும்,
சாருஜன், சங்கவி, ராகவன், பிரவீனா, ராகுல், ஜெம்ஸ் முரளிதரன் (JR) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave Ajax ON lis 2E3 Canada) இல் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
