திரு. தியாகராஜா நேசநாதன்

(Ret. National Live Stock Development Board - Project Officer)

தியாகராஜா நேசநாதன்

தோற்றம்: 26 அக்டோபர் 1938 - மறைவு: 14 ஜூன் 2024

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா நேசநாதன் அவர்கள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா-மீனாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம்-பாலாம்பிகை தம்பதியினரின் அருமை மருமகனும்,

ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஷர்மிளா (ஜேர்மனி), ஷிறோமி (உதவி முகாமையாளர்- கொமர்ஷல் வங்கி, ஸ்ரான்லி வீதி கிளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலேஸ்வரன் (ஜேர்மனி), கஜன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, யோகநாதன் மற்றும் தில்லைநாதன் (வவுனியா), ஜெகநாதன் (அவுஸ்திரேலியா), சந்திரேஸ்வரி (அவுஸ்திரேலியா), லிங்கேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, கமலேஸ்வரன் (அவுஸ்திரேலியா), விக்கினராஜா (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,

Dr. சுலோஜனா (நியூசிலாந்து), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் நாவலர் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

392/2 நாவலர் றோட்,

நல்லூர், யாழ்ப்பாணம்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolence "
- Chacko family  (India, 18/06/2024 12:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)