திரு. தியாகராஜா தியாகேஸ்வரன் (கண்ணன்)

(கணனி பொறியியலாளர்)

தியாகராஜா தியாகேஸ்வரன் (கண்ணன்)

தோற்றம்: 19 அக்டோபர் 1965 - மறைவு: 02 நவம்பர் 2024

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா தியாகேஸ்வரன் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா-இராசமலர் தம்பதியினரின் அன்புப்புதல்வனும்,

காலஞ்சென்ற சிவஞானம்-தர்மேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை இந்துக்கல்லூரி) தம்பதியினரின் மருமகனும்,

ரஞ்சினி (ஆசிரியை-கொ/இராமநாதன் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக்கணவரும்,

ஜீவினி, திவேதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லெனன், யுகஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியாகேஸ்வரி, தியாகரூபன், தியாகசொரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரகுநாதன், சூரியகாந்தா, உதயதாஸ்-குருசாந்தி, சத்தியதாஸ்-சுரேகா (ஆசிரியை குமரோதயம் தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் மைத்துனரும்,

ஷயாளினி, டாலியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 04-11-2024 திங்கட்கிழமை முதல் இல-58, ஹாமர்ஸ் அவனியு, வௌ்ளவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-11-2024 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.    

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2024 05:00)