Mr. Thiyagarasa Kanagasabai
(இளைப்பாறிய ஆசிரியர்)
Deceased: 13 July 2025
யாழ். நல்லூர் இராஜ வீதியை பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை தியாகராசா 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா (இலண்டன்), வனிதா (இலண்டன்), வாசுகி (கனடா), நிஷாங்கன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நடராஜா (சீனி), சிவராஜா (சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
யோகேந்திரன் , ஜெயக்குமார், தயாளன், லவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சேரன், தாரணி, வர்ஷினி, தஸ்வினி, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
