திருமதி. தியாகராசா அன்னலட்சுமி
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1936 - மறைவு: 13 டிசம்பர் 2025
யாழ் தனங்களப்பு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் மற்றும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா அன்னலட்சுமி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு - பொன்னம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சின்னத்தம்பி (முன்னாள் அதிபர் - யாழ் அமிர்தாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
கோடீஸ்வரன் (கனடா), இராஜேஸ்வரி, விக்னேஸ்வரன் (யாழ். அருணோதயக் கல்லூரி), திருச்செல்வி (யாழ். டிறிபேக் கல்லூரி), திருச்செல்வம் (சாயி மில் உரிமையாளர்), நடராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிறேமளி (கனடா), காலஞ்சென்ற சங்கரலிங்கம் (நில அளவை உத்தியோகத்தர்), செல்வராணி (ஆசிரியை - யாழ். ஏழாலை மத்திய வித்தியாலயம்), பிரபாகரன், இராஜேஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கோப்பாய் பிரதேச செயலகம்), பிரிந்தா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆனந்தகுமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
அர்தனி, இபியா, ஜனார்த்தன், ஜனார்த்தனி, விதுசன், சகாணன், கரண்யன், சாயி கீர்த், கவிஷா, கஷ்ணிகா, சர்விகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:-
முருகமூர்த்தி கோவில் வீதி,
www.tamilthakaval.org
