திருமதி. தோத்திரமலர் சச்சிதானந்தம்
(இளைப்பாறிய ஆசிரியை)
மறைவு: 11 நவம்பர் 2022
யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், Liverpool UK ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியை திருமதி தோத்திரமலர் சச்சிதானந்தம் (சதானந்தா வித்தியாசாலை அளவெட்டி மற்றும் யூனியன்கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மெளனதவமுனி பொ.கைலாசபதி ( ஓய்வுபெற்ற உபஅதிபர் ஆசிரியகலாசாலை , திருநெல்வேலி) - இராசம்மா தம்பதிகளின்(அளவெட்டி) பாசமிகு மூத்தமகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா-மனோன்மணி தம்பதிகளின் (அளவெட்டி) அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் (ஒய்வுபெற்ற கிராம சேவையாளர் , மல்லாகம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி பழையமாணவர்களாகிய ஜனீர்தா(UK), கோபிநாத் (Singapore), மேனகா(UK), கஜன்(UK) அவர்களின் பாசமிகு தாயாரும்,
நடேசராணியின் பாசமிகு சகோதரியும், கைலாசபதி,கோபிகா,துளசிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சயந்தன், கிருஷ்ணலீலா ,சுதர்ஜன், மதுரா மற்றும் வவித்திரா , ரஜீவன், சஜுபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்சித்,கங்கேஷ்,ஆருஷி, வைஷ்ணவி,வைஷாலி,தருணி, கிர்த்திக்,ஹரிஷ்,சாத்விக்,சாகினி மற்றும் கவிஷ், ஹரிணி, பிரணவ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்ற செல்லையா இராமச்சந்திரன், காலஞ்சென்ற சிவகுருநாதன் அன்னபூரணம், மற்றும் சுந்தரலிங்கத்தின் அன்பு மைத்துனியும் பிரபாகரன்,கிருபாகரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
நிரோசா, ரிஷசாந்தி ஆகியோரது சின்னமாமியும் ஆவார்
அஞ்சலிக்காக சிங்கப்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் புதன்கிழமை Liverpool (UK) இற்கு எடுத்துவரப்பட்டு வரும் ஞாயிற்றுகிழமை 20-11-2022 அன்று Liverpool இல் உள்ள மண்டபத்தில் (Hall to be updated by tomorrow) காலை 9.00 மணிமுதல் 12:30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று West Lancashire Cemetery & Crematorium Pippin St, Ormskirk L40 7SP இல் 1:30 மணிக்கு தகனக்கிரியைகள் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்:-
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
www.tamilthakaval.org
