திருமதி. திருச்செல்வி மன்மதராஜா
(இளைப்பாறிய தொலைத்தொடர்புகள் திணைக்கள உத்தியோகத்தர்)
தோற்றம்: 01 ஜூன் 1958 - மறைவு: 10 ஜூலை 2024
யாழ். கொக்குவில் பூநாறிமரத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Grigny centre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருச்செல்வி மன்மதராஜா அவர்கள் 10-07-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-சற்குணவதி தம்பதியினரின் அன்புப் புத்திரியும்,
காலஞ்சென்ற கனகசபை-வடிவேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,
மன்மதராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தீப்தி, திலீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விந்தூரியன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
திவ்வியன் அவர்களின் பாசமிகு பேத்தியும்,
சற்குணலிங்கம் (இளைப்பாறிய தபால் அதிபர்-இலங்கை), செம்மணச்செல்வி (இலங்கை), ஜெயராஜலிங்கம் (முன்னாள் அரச நிலவளவையாளர்-இலங்கை), மகாலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
காலஞ்சென்ற ரோஸ், ஜெகஜனனி (இலங்கை), காலஞ்சென்ற தர்மராஜா, மஞ்சுளா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு அண்ணியும்,
சத்தியநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஆஷா பிரியா (கனடா), சுரேந்திரன் (கனடா), காயத்திரி, கார்த்திகா, வஹீசன் (இலங்கை), காருண்யா, வர்ஷா (இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,
காலஞ்சென்ற ஆதவன், அகரன் ஆகியோரின் அன்பு ஆச்சியும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 13-07-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையும், 18-07-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையும் 106 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France என்ற முகவரியில் அமைந்துள்ள Funérarium Espace Funéraire Ermitage இல் புகழுடல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
